ஆசிரியர் அனுபவம்: சு. உமா மகேஸ்வரி – “வாய்ப்பாடு”

டிக்கவேண்டுமே அம்மா …. நாங்க ஆஸ்டல் மா, வீட்டிலிருந்து எங்களைப் பார்க்கவரும் போதுதான் கேட்கமுடியும் என்ற குரல்கள் ஒலிக்க, அப்படியா.. என்று யோசித்து, புத்தகக் கடைகளில் அலைந்து (தமிழ் வாய்ப்பாட்டுக்கு இங்கு பஞ்சம் ) விடுதி மாணவிகள் ஒன்பது பேருக்கும், வீட்டிலிருந்து வந்துபோகும் அன்புச்செல்விக்கும், வாய்ப்பாடு வாங்கித் தந்தாயிற்று. பேனாக்கள் கொடுத்தாயிற்று.

பென்சில் இல்லையா, ஸ்கேல் இல்லையா, ரப்பர் இல்லையா? வகுப்பு முழுமைக்கும் இல்லை என்ற குரல்களுக்கு என் கைப்பையில் இருந்து எடுத்துத் தந்துவிட்டு, இப்போது எதுவுமில்லை வாய்ப்பாடு எழுதி வரவில்லை, படிக்கவில்லை என்று சொல்லிவிடக்கூடாது என்ற ஒப்பந்தம் போட ஒரே மகிழ்ச்சி.

அன்புச்செல்வி ஓடிவந்து சிரித்த முகத்துடன், “மிஸ் நீங்க எங்களுக்காக வாய்ப்பாடு வாங்கித் தந்தீங்க, ஸ்கேல் வாங்கித் தந்தீங்க, பென்சில், இங்க் பேனா, ரப்பர் எல்லாம் வாங்கிட்டு வந்து தந்துட்டிங்க, (வீட்டிலிருந்து வருபவர் ) நானும் ஆஸ்டல் பிள்ளைங்க கூப்பிடற மாதிரியே அம்மான்னு கூப்பிடட்டுமா? எனச் சிரிக்க, அவளும் பார்க்க, நானும் பார்க்க கண்கள் சிரிக்க கட்டிக்கொண்டேன். ம் … கூப்பிடு தங்கம்…
மிஸ் ரோமன் எழுத்துமுறை 5 வாட்டி எழுதிட்டோம். குரல்கள் மகிழ்ச்சியில் துள்ள…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *