சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது!

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது!

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் எழுத்தாளர்-இயக்குநர் குகன் சென்னியப்பன் கூறும்போது, ”இந்த மாதம் உலகம் முழுவதும் உள்ல திரையரங்குகளில் வெளியாக ’வெப்பன்’ திரைப்படம் தயாராகி வருகிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படத்தில் எல்லோருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளோம். நிச்சயம் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்றும் நம்புகிறேன். சூப்பர் ஹ்யூமன் எலிமெண்ட்டை அடிப்படையாகக் கொண்டு சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லராக ‘வெப்பன்’ படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை பல திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான ஆக்‌ஷன் கதை இதில் இருக்கும். மில்லியன் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்கள் எம்.எஸ்.மன்சூர், எம்.எஸ்.அப்துல் காதர் மற்றும் எம்.எஸ்.அஜீஷ் ஆகியோரின் ஆதரவு இல்லாமல் இந்தப் படம் சாத்தியமில்லை” என்றார்.

மேலும், ”அவர்கள் எனக்கு முழுமையான படைப்பாற்றல் சுதந்திரம் கொடுத்தனர். நாயகனாக நடிகர் சத்யராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதன்முறையாக, அவர் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் எனக்கும் ஊக்கம் கொடுத்தது. நடிகர் வசந்த் ரவியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் நிச்சயம் கவனம் ஈர்க்கும். படத்தில் நீங்கள் எதிர்பார்காத நிறைய திருப்பங்கள் இருக்கும். ராஜீவ் மேனன் சார் இந்த படத்தில் ஸ்டைலான அதேசமயம் பவர்ஃபுல்லான வில்லனாக நடித்துள்ளார். தன்யா ஹோப்பின் நடிப்பு நிச்சயம் பாராட்டப்படும். இந்தப் படத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு எனது பணிவான நன்றிகள். இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் ‘வெப்பன்’ படத்தை பார்வையாளர்கள் எப்படி கொண்டாட இருக்கிறார்கள் என்பதை நேரில் பார்க்க ஆர்வமாக உள்ளேன்”.

மில்லியன் ஸ்டுடியோ தயாரித்திருக்கும் இந்தப் படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இவர்களோடு யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன்,
வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் உள்ளனர். ஜிப்ரான் இசையத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு கோபி கிருஷ்ணா எடிட்டிங், கலை சுபேந்தர் பி.எல், ஆக்‌ஷன் சுதீஷ்.

தொழில்நுட்பக் குழு:

ஆடை வடிவமைப்பாளர்கள்: லேகா மோகன்,
ஒலி கலவை: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,
ஒலி வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,
வண்ணம்: ஸ்ரீ
டிஐ லேப்: புரோமோவொர்க்ஸ்,
விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்: கோகுல்,
ஒப்பனை: மோகன்
ஸ்டில்ஸ்: விஜய்
விளம்பர வடிவமைப்பு: தினேஷ் அசோக்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: காந்தன்,
நிர்வாக தயாரிப்பாளர்: ரிஸ்வான்.ஏ,
இயக்குநர்கள் குழு: சிஎஸ் கார்த்திக் குமார், ஆர் பாலகுமாரன், கெளதம் ஆனந்த், கே தமிழ்ச்செல்வன், பரத் கிருஷ்ணா, சுபாஷ் சந்திர போஸ்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *