‘கஜானா’ படத்திற்கு ரசிகர்களின் ஆதரவைப் போல், திரையுலகினரும் ஆதரவு அளிப்பார்கள்

சினிமா தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கொடுக்கும் வரவேற்பை தொடர்ந்து, பலர் இதுபோன்ற வித்தியாசமான முயற்சியை மேற்கொள்வதற்கான நம்பிக்கையையும் கொடுக்கும், எனவே எங்களது இந்த ‘கஜானா’ படத்திற்கு ரசிகர்களின் ஆதரவைப் போல், திரையுலகினரும் ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், வேதிகாவுடன் சாந்தினியும் இணைந்து ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருப்பதோடு, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழகிலும், கவர்ச்சியிலும் கிரங்கடிக்கவும் செய்திருக்கிறார்.

ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய சாகசங்கள் நிறைந்த ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வரும் ‘கஜானா’ கோடை விடுமுறையின் கொண்டாட்டமாக மே முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.

மேலும், ‘கஜானா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ப்ரீபுரொடக்‌ஷன்ஸ் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் பாகம் வெளியான பிறகு இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் உள்ளிட்ட விவரங்களை படக்குழு அறிவிக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *