இப்படி ஒரு படம் பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் நான் சினிமாவிற்கு வந்தேன் – ஹபீபி படம் இயக்குநர்

“ஹபீபி” – அரபுச் சொல்லான ஹபீபிக்கு தமிழில் ‘என் அன்பே’ என்று அர்த்தம். இதன் First Look Poster நேற்று வெளியாகி சமூகவளைத்தளங்களில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.

படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் கூறும்போது, “இப்படி ஒரு படம் பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் நான் சினிமாவிற்கு வந்தேன். இருபத்திரண்டுகளுக்கு பிறகு இப்போது சாத்தியமாகியிருக்கிறது. நமது ஆரவாரமான பேச்சுக்களை ஓதுக்கிவைத்துவிட்டு சகமனிதனின் தோளில் கைகளை போட்டவாறு மனங்களைப்பற்றி பேசவேண்டிய நேரமிது. மனிதத்தையும் அன்பையும் சக மனிதன் மீதான சகிப்புத்தன்மையையும் பேசவேண்டிய தேவையுள்ளது.

இந்த படம் தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் தமிழ் பேசக்கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வியலை பற்றிய படமாக இருந்தாலும் எல்லா மக்களையும் ஈர்க்கக்கூடிய படமாக இருக்கும். இதன் பின்னணியில் ஒரு அழகான காதல் கதை ஒன்றும் பின்னப்பட்டுள்ளது. இப்படத்தை காணும் அனைவரும் தங்கள் வாழ்கையோடு தொடர்புபடுத்தி பார்த்து தங்களையே பார்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அந்தவகையில் சர்வதேச அளவில் வியாபார ரீதியாகவும் இந்த படம் சென்று சேரும் என்பதால் இந்த படத்திற்கு ஹபீபி என டைட்டில் வைத்துள்ளோம்.

பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் கஸ்தூரிராஜா இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்திற்காக கஸ்தூரிராஜாவை அணுகியபோது நான் முதலில் திரைக்கதையை படித்துப் பார்க்கிறேன் என்று கூறினார். இந்த கதை அவருக்கு பிடித்து போய் விட்டதுடன் இதில் தனது பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறி இதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அறிமுக நாயகன் ஈஷா நடிக்க, ஜோ என்கிற படத்தின் மூலம் இளைஞர்களிடேயே பெரிதும் கொண்டாடப்பட்ட மாளவிகா மனோஜ் நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவில், சாம் சி.எஸ். இசை அமைத்திருக்கிறார். இப்படத்தை மாநாடு, வணங்கான் படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்த படத்தை பார்த்துவிட்டு அவரே விருப்பப்பட்டு தனது “வி ஹவுஸ் புரொடக்சன்” சார்பில் வெளியிட இருக்கிறார்.

– சினிமா வேலன்

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *