இந்தியாவில் முதன்முறையாக சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் ‘அமீகோ'(Amigo Movie)

தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை சாந்தினி தமிழரசன் (Chandini Tamilarasan )கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அமீகோ’ (Amigo)எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் முதன்முறையாக சைபர் ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லர் ஜானரில் ‘அமீகோ’ திரைப்படம் தயாராகி இருப்பதால், இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.‌

அறிமுக இயக்குநர் பி. பிரவீண் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமீகோ’ எனும் திரைப்படத்தில் சாந்தினி தமிழரசன், அர்ஜுன் சோமையாஜுலா, சுவிதா ராஜேந்திரன், பிரவீன் இளங்கோ, வத்சன் சக்கரவர்த்தி, வெக்கே, மனிஷா ஜஷ்னானி, பிரக்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘அயலி’ எனும் இணைய தொடர் புகழ் ரேவா இசையமைத்திருக்கிறார். ஏழுமலை ஆதி கேசவன் கலை இயக்குநராக பணியாற்ற, படத்தொகுப்பு பணிகளை பிரதீப் சந்திரகாந்த் கவனித்திருக்கிறார். சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரத்யாக்ரா மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. கிரிஜா தயாரித்திருக்கிறார். இணை தயாரிப்பு பணியை ஜீத்து பிரபாகரன் மேற்கொண்டிருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” அமீகோ திரைப்படம் இந்தியாவில் தயாராகி இருக்கும் முதல் சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் திரைப்படமாகும். இந்திய திரை உலகினரை திரும்பிப் பார்க்க வைக்கும் புதுமையான திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. டிஜிட்டல் உலகின் மறுபக்கத்தை.. திகிலூட்டும் அம்சங்களுடன் நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் தொடர்பான அத்துமீறலில் சிக்கும் நண்பர்கள் குழுவை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.‌ இவர்கள் இணையத்தின் மறைவான பகுதியில் பதுங்கி இருக்கும்.. ஒரு தீங்கை விளைவிக்கும் நிறுவனத்தின் கொடூரமான சவால்களை எதிர்கொண்டவர்களாக இருக்கலாம் அல்லது வெளிப்புறத் தோற்றத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற பயங்கரமான யதார்த்தமாகவும் இருக்கலாம்.

இந்த திரைப்படத்தின் சிறப்பம்சம்- அதன் தனித்துவமான திரைக்கதையிலும், ஜானரிலும் உள்ளது. சைபர் திரில்லர் திரைப்படங்கள் – பல ஆண்டுகளாக பார்வையாளர்களை வசீகரித்து, தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கத்தையும், அதிகரித்து வரும் ஆபத்துகளையும் விவரித்திருக்கிறது. திகில் திரைப்படங்களும் ஏராளமாக வருகை தந்திருக்கிறது. ஆனால் அமீகோ – அற்புதமான கற்பனை மற்றும் அறிவியல் புனைவு கதை அம்சங்களை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இது மேலும் மர்மத்தை பற்றிய பயத்தை கூடுதலாக அதிகரிக்கிறது. இந்த தனித்துவமான கலவையானது இந்தியாவில் திகில் பட படைப்புகளை.. அதன் எல்லைகளை மறு வரையறை செய்யும் திறனை கொண்டிருக்கிறது.‌ பாரம்பரியமாக இந்திய திகில் படங்கள் பெரும்பாலும் பேய் , ஆவி போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயங்களை நம்பியுள்ளன. ஆனால் ‘அமிகோ ‘ இதுவரை யாரும் அறியப்படாத பிரதேசத்திற்குள் நுழைகிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் உலகில் அமைதியற்ற சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது. இந்த புதிய முற்போக்கான படைப்பு பார்வையாளர்களை பயமுறுத்தவும் செய்யும். அதே தருணத்தில் கவர்ந்திழுக்கவும் செய்யும்.

அமீகோ என்றால் நண்பர் என பொருள். இந்தத் திரைப்படம் நண்பர்களை சுற்றியுள்ள சூழ்ச்சிகளையும், அதன் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகளையும் சுவாரசியமாக வழங்குகிறது. மேலும் இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க அடையாளத்தை ஏற்படுத்தும்.

ஊடக துறையில் பணியாற்றும் நண்பர்கள் குழுவிற்கு இடையேயான உரையாடலின் போது… எதிர்பாராத வகையில் அன்னியன் ஒருவனின் காணொளி அழைப்பு குறிக்கிடுகிறது. இவர்களின் உரையாடலில் எதிர்பாராமல் ஊடுருவிய அந்த அன்னியன் .. எதிர்பார்க்காத திருப்பத்தை ஏற்படுத்துகிறான். அந்த மர்ம உருவம் – நண்பர்களைப் பற்றிய அந்தரங்கமான விசயங்கள்.. அவர்கள் மறைக்கும் இருண்ட ரகசியம் ..‌ தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கிறது. அத்துடன் அவர்களை ஒரு வகையான விளையாட்டில் ஈடுபடுமாறு நிர்பந்திக்கிறது. அவர்களும் வேறு வழி இல்லாமல் ஆபத்தை உணர்ந்தே அந்த விளையாட்டில் மூழ்குகிறார்கள். அவர்களின் ஆன்லைன் உலகத்திற்கும், யதார்த்தத்திற்கும் இடையிலேயான நிலைபாடு கேள்விக்குறியாகிறது. அந்த நண்பர்கள்- மர்ம மனிதன் வீசிய வலையில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை” என்றார்.ஆகஸ்ட் மாதம் விக்கி பிலிம்ஸ் வெளியீடாக வருகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *