’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’

உஸ்தாத் ராம் பொதினேனி, காவ்யா தாபர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!

உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் ’ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், இதன் சீக்வல் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். முதல் சிங்கிள் ஸ்டெப்பா மார் அபார வரவேற்பைப் பெற்றது. இன்று, படத்தின் இரண்டாவது சிங்கிள் மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது. காசர்லா ஷ்யாம் எழுதிய பாடல் வரிகள் ஹைதராபாத் ஸ்லாங்கைப் பின்பற்றி வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது.

இந்த பார்ட்டி பாடலுக்கு மணிஷர்மாவின் பூர்வீக நாட்டுப்புற இசையமைப்பு மற்றும் அதன் துடிப்பான பீட்ஸ் கூடுதல் பலம். கேட்பவர்களுக்கு அதீத எனர்ஜி கொடுக்கும் வகையிலான இசைக்கருவிகளைப் பயன்படுத்தியுள்ளார். ராகுல் சிப்லிகஞ்ச், தனுஞ்சன் சீபனா மற்றும் கீர்த்தனா ஷர்மா மூவரும் இந்தப் பாடலை எனர்ஜியாகப் பாடியுள்ளனர்.

ராம் மிகவும் எனர்ஜிடிக்காக நடனம் ஆடி பார்ப்பவர்களுக்கும் அந்த எனர்ஜியை கடத்துகிறார். அவருடைய ஹூக் ஸ்டெப்பும் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. விறுவிறுப்பான செட்களில் விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்ட இந்தப் பாடலுக்கு ராம் ஜோடியாக காவ்யா தாப்பர் நடனமாடி ஈடுகொடுத்துள்ளார். இனிவரும் காலங்களில் பார்ட்டியில் நிச்சயம் இந்தப் பாடல் அனைவருக்கும் முதன்மை தேர்வாக இருக்கும்.

பூரி கனெக்ட்ஸ் பேனரில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத் ஒரு வலுவான கதாபாத்திரத்திலும், காவ்யா தாபர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி பான் இந்தியா ரிலீஸுக்கு தயாராகி வரும் இப்படத்தின் ஒளிப்பதிவை சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஆகியோர் கையாண்டுள்ளனர்.

நடிகர்கள்: ராம் பொதினேனி, சஞ்சய் தத், காவ்யா தாப்பர், அலி, கெட்அப் ஸ்ரீனு மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்,
பேனர்: பூரி கனெக்ட்ஸ்,
தலைமை செயல் அதிகாரி: விசு ரெட்டி,
இசை: மணிஷர்மா,
ஒளிப்பதிவு: சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி
ஸ்டண்ட் டைரக்டர்: கெச்சா, ரியல் சதீஷ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா ,
மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *