‘இதயத்தை அசைத்தன’
இயக்குனர்/கவிஞர்
சீனு ராமசாமி எழுதிய
‘மாசி வீதியின் கல் சந்துகள்’
என்ற அவரது
நான்காவது கவிதை தொகுப்பை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டது
அந்த நவீன தமிழ்க் கவிதைகளை படித்து கவிஞர் வைரமுத்து அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அன்புமிகு சீனு!
‘மாசி வீதியின் கல் சந்துகள்’ பார்த்தேன்.
ஈரமும் சாரமும் மிக்க கவிதைகள்.
கவனம் ஈர்த்தன; புருவம் உயர்த்தின.
சான்றாக,
‘மணல் திருடனுக்கும்
அஸ்தி கரைக்கத் தேவைப்படுகிறது நதி’
‘ஏழையின் உடலை
அவன் உறுப்புகள் கைவிடுதல் துயரம்’
போன்றவை இதயத்தை அசைத்தன.
தொகுப்பில் செம்மையை நோக்கிய
நகர்வு தெரிகிறது.
கலைத்துறை கவிதைத்துறை இரண்டிலும்
உச்சம் தொடும் அசுரத்தனம் தெரிகிறது.
வாழ்த்துக்கள்.
-வைரமுத்து