‘பிளடி பெக்கர்’ விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தொகையை திருப்பி அளித்த நெல்சன். ரஜினி பாணியில் நஷ்ட தொகையை திருப்பி அளித்ததால் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி.
‘பிளடி பெக்கர்’ திரைப்படத்தால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தொகையை தயாரிப்பாளரான நெல்சன் திலீப்குமார் திரும்ப வழங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் சிவபாலன் இயகக்த்தில் நடிகர் கவின் நடிப்பில் பிளடி பக்கர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. இப்படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தயாரித்திருந்தார். பிளடி பெக்கர் படம், கலவையான விமர்சனத்தை பெற்றதால், திரையரங்க விநியோகஸ்தர்கள் நஷ்டத்தையே சந்தித்துள்ளனர்.
இதனையடுத்து, தயாரிப்பாளர் நெல்சன், ரஜினி பாணியில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தொகையை திரும்ப வழங்கியுள்ளார். இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே இப்படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் விற்பனை மூலம் தயாரிப்பாளர் நெல்சனுக்கு லாபமே என கூறப்படுகிறது.
– ‘சினி’ நந்து