தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு, தற்போது விஜய் நடிக்கும் ‘‘கோட்’’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.இவர் இப்போது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’‘ என்ற படத்தை வழங்குகிறார்.
ஐஸ்வர்யா. எம் மற்றும் சுதா.ஆர் ஆகியோர் தயாரிப்பில் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. படத்தை ‘‘மீசையை முறுக்கு’ படத்தில் நடித்த நடிகரும், நாளைய இயக்குனர் சீசன் 5 ல் பங்கேற்றவருமான ஆனந்த் இயக்கி இருக்கிறார். அதோடு படத்தில் முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.
இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் மற்றும் ஒயிட் பெதர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆனந்துடன் ‘மற்றும் லீலா, குமரவேல், விசாலினி, ஐஸ்வர்யா எம், அனந்த், ஆர்ஜே விஜய், இர்பான் வில்ஸ்பட்,தேவ்,மோனிகா ஆகியோரும் நடித்து இருக்கும் இப்படத்துக்கு ‘‘காற்றின் மொழி’‘ படத்துக்கு இசை அமைத்த . காஷிஃப் இசை அமைக்கிறார்.
பாடல்களை நடிகர் தனுஷ், இசை அமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜி பிரகாஷ் ஆகியோர் பாடி இருக்கிறார்கள். தமிழ் செல்வன் ஒளிப்பது செய்துள்ளார். பென்னி ஆலிவர் எடிட்டிங்கை கவனித்துள்ளார்.
இந்தப்படம் சென்னை 28, பாய்ஸ், என்றென்றும் புன்னகை போன்ற படங்கள் மாதிரி நண்பர்களை பற்றிய படம். எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு கால கட்டத்துக்கு ஏற்ப நண்பர்கள் வந்து இணைவார்கள். அவர்களுடன் பழகிய அந்த அனுபவமே மறக்க முடியாததாக இருக்கும். அப்படி ஒரு நண்பனின் வாழ்க்கையில் நடந்த கதை தான் இதுவும். என் நண்பனின் கதை.
சென்னை 28 மாதிரி பிரஷ் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக பெரிய நடிகர்கள் பக்கம் போகாமல் புதுமுகங்களை வைத்தே எடுத்து இருக்கிறோம். படத்தில் 5 ஹீரோ. ஹீரோ என சொல்வதை விட நண்பர்கள் என சொல்லலாம்.பாவனி ஸ்ரீ முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.
இக்கதையை இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் சொன்ன போது கதையை கேட்டவர், ‘‘அடேய்.. இது சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகம் மாதிரியே இருக்கே‘‘என கூறி மகிழ்ந்தார். அதோடு இப்படத்துக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என கருதி இப்படத்தையும் அவரே வழங்குகிறார்.
அவர் வந்ததும் இப்படம் பெரிய படமாகி விட்டது. அதே மாதிரி படத்தின் இசையும், பாடல்களும் பெரியாதாக பேசப்பட்டு விட்டது. இப்படத்தில் வரும் நட்பு பாடலை ஒவ்வொரு கல்லூரியிலும் கொண்டாடுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
படத்தை சக்தி பிலிம்ஸ் பட அதிபர் சக்திவேலனுக்கு போட்டு காட்டினோம். பார்த்ததுமே அவருக்கு பிடித்து விட்டது. இப்போது அவரே படத்தை வாங்கி வெளியிடுகிறார்.
இவ்வாறு டைரக்டர் ஆனந்த் கூறினார். அப்போது பட அதிபர் ஐஸ்வர்யா, நடிகரும் ஆர் ஜே வுமான விஜய், நடிகர் தேவ், இசைஅமைப்பாளர் காஷிப் ஆகியோரும் உடன் இருந்தனர்