கடந்த சில மாதங்களாக தமிழில் வெளிவந்த படங்களை எல்லாம் பார்க்குறப்போ… அப்படியே மூச்சு முட்டிச் செத்துப் போயிருவோமோன்னு கூட தோணும்! அப்பல்லாம், கொஞ்சம் ஆசுவாசப்படுத்த வேண்டி அடுத்த லாங்குவேஜ் படம் பார்ப்பேன். வென்டிலேட்டர் வச்ச மாதிரி அப்படியொரு எனர்ஜி கிடைக்கும்.
ஆனாலும் ஒரு கவலை : மறுபடியும் மூச்சு முட்ட வைக்கும்.தமிழ் சினிமா இனி அவ்வளவுதானா!? என்று மண்டை சூடாகிற நேரத்தில் ‘கருடன்’ படம் வந்து கவலை தீர்த்தது.
கடந்த சில நாட்களாகவே விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ படம் பற்றி இண்டஸ்ட்ரி முழுக்க டாக்: நல்லா வந்திருக்கு… கேட்க சந்தோசமாக இருந்தாலும்,விஜய் சேதுபதி நடித்து சமீப காலமாக வந்த படங்களின் லிஸ்ட் அத்தனையும் பயாஸ்கோப் மாதிரி மனக்கண் முன்னாள் வந்து போவதையும் மறக்க முடியவில்லை!
தவிர, சேதுவுக்கு இது ஐம்பதாவது படம்… வழக்கமாக தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லோரும் இருபத்தஞ்சாவது படம், அம்பதாவது படம், எழுபத்தஞ்சு, நூறு என்ற டார்கெட் லிஸ்டில் சிலர் மட்டும்தான் ‘டாஸ்க்’ விண் பண்ணியிருக்கிறார்கள்! மகாராஜா ‘டாக்’கில் எனக்கு அந்த பயமும் இருந்தது! அதையெல்லாம் தாண்டி, ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் இயக்கத்தில் வரும் இரண்டாவது படம், ஏழு வருஷ இடைவெளியில இந்த படம் வருது… ஷோ, தப்பா இருக்காது என்ற நம்பிக்கையும் ஒரு பக்கம் இருந்தது.
இன்று பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக காட்சி நடந்தது. கொஞ்சம் டவுட்டாகத்தான் போனேன். முதல் பாதி முழுக்க ஒரு டார்க் காமெடி படம் போலவே போய்க்கிட்டு இருந்துச்சு. இன்டர்வெல் பிளாக் போடுற இடத்திலிருந்து கதையின் போக்கு மாறிடுச்சு.
வழக்கமாக, படம் பார்க்கும்போதே… யாரைப் பற்றியும் கவலையில்லாமல் சிலர் போன் பேசிக்கொண்டே இருப்பார்கள்.’இந்தப் படத்துக்கு இவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பதே அதிகம்… போவியா ‘ என்பது போல் இருக்கும்: போனர்களின் ரியாக்சன்! இன்றைய பிரஸ் ஷோவில் ஒருத்தர் கூட போன் பேசாமல் இருந்தார்கள், அந்தளவுக்கு இருந்தது ‘மகாராஜா’.
கடைசி இருபது நிமிசம் ஸ்க்ரீன் ப்ளேவின் உச்சம். மொத்த படத்தின் ஸ்க்ரீன் ப்ளேவும் செம ஸ்மார்ட் என்பது வேற! படத்தில் நடித்த அத்தனை பேரும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள்.
சேதுவுக்கோ, இயக்குனருக்கோ தேசிய விருது நிச்சயம். வாழ்த்துகள் டீம்…
பெண் பிள்ளைகளைப் பெற்ற மகாராஜாக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். டோண்ட் மிஸ் இட்.