ஹைபர் லிங்க் கதையில் நடிக்கும் விதார்த், ஜனனி

மூன்று கதை, ஒரு முடிவு… விதார்த், ஜனனி நடிக்கும் புதிய படம்

தமிழ் சினிமாவில் பல வெற்றி பெற்ற படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை செய்து வந்த குவியம் ஸ்டுடியோஸ் நிறுவனம், தற்போது குவியம் பிலிம்ஸ் என்ற பெயரில் பட தயாரிப்பில் இறங்கியுள்ளது.  குவியம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் லால்குடி எம்.ஹரிஹரன் தயாரிக்கும் புதிய படத்தின் ஆரம்ப பணிகள் தொடங்கியுள்ளது.

இந்த புதிய படத்தில் விதார்த், ஜனனி, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், பப்லு பிரித்விராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஷாரிக் ஹாசன், விகாஸ், மகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் எழுத லால்குடி எம்.ஹரிஹரன் இசையமைக்கிறார். கோவிந்த்.நா படத்தொகுப்பு செய்யும் இப்படத்திற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி கிருஷ்ணா குமார் இயக்குகிறார்.

இப்படம் குறித்து கிருஷ்ணா குமார் கூறும்போது, நாம் செய்த தவறு எந்த காலத்திலும் நம்மை விடாது. எதாவது ஒரு வழியில் நம்மை வந்து சேரும் என்ற கதையை, ஹைபர் லிங்க் நான் லீனியர் பாணியில் திரைக்கதை அமைத்து இருக்கிறேன். இதுவரை யாரும் சொல்லாத வகையில் வித்தியாசமாக ஒன்றை முயற்சி செய்ய இருக்கிறோம். சஸ்பென்ஸ் திரில்லர், டிராமா, காதல் ஆகிய மூன்று கதைகளாக திரைக்கதை நகர்ந்து ஒரே புள்ளியில் கதை முடியும். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கி 35 நாட்கள் தொடர்ந்து நடத்த இருக்கிறோம் என்றார்.

இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் போடப்பட்டது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

நடிகர்கள்:

விதார்த்
எம்.எஸ்.பாஸ்கர்
ஜனனி
சரவணன்
பப்லு பிரித்விராஜ்
நமிதா கிருஷ்ணமூர்த்தி
ஷாரிக் ஹாசன்
விகாஸ்
மகா

தொழில்நுட்ப கலைஞர்கள்:

எழுத்து – இயக்கம் : கிருஷ்ணா குமார்
ஒளிப்பதிவு : பிரபு ராகவ்
இசை : லால்குடி எம்.ஹரிஹரன்
பாடலாசிரியர்: கார்த்திக் நேதா
எடிட்டர்: கோவிந்த்.நா
தயாரிப்பு வடிவமைப்பாளர்: சரண்யா ரவிச்சந்திரன்
ஆடை வடிவமைப்பாளர்: லேகா மோகன்
தயாரிப்பு: குவியம் பிலிம்ஸ்
தயாரிப்பாளர்: லால்குடி எம் ஹரிஹரன்
மக்கள் தொடர்பு : சதீஷ்வரன்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *